இந்திய தூதரகத்திற்குள் புகுந்து தாலிபான்கள் சோதனையிட்டுள்ளனர்..
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ளனர்.. அந்நாட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் தலிபான்களின் ஆட்சியை நினைத்து பயந்து போய் இருக்கின்றனர்.. அங்கிருந்து எப்படியாவது தப்பித்து வேறு நாட்டுக்கு சென்று விட வேண்டும் என்று முயற்சிக்கின்றனர்.. சர்வதேச நாடுகள் தங்களது தூதரக அதிகாரிகளை விமானம் மூலம் மீட்டு வருகிறது.. இந்திய தரப்பிலும் இரண்டு கட்டங்களாக 250 இந்திய தூதரக அதிகாரிகள் மீட்கப்பட்டுள்ளனர்.. உலக நாடுகள் அனைத்தும் ஆப்கானை உன்னிப்பாக கவனித்து வருகின்றது.
பாகிஸ்தானும், சீனாவும் இந்த ஆட்சிக்கு ஆதரவு தந்துள்ளது.. ரஷ்ய அரசு தலிபான்களின் செயல்பாடுகளை பொறுத்து எங்களது முடிவு இருக்கும் என்று தெரிவித்துள்ளது..இதனிடையே நாங்கள் எதிரிகளை சம்பாதிக்க விரும்பவில்லை, எங்களது ஆட்சிக்கு ஆதரவு கொடுக்குமாறு தலிபான்கள் உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளது.. மற்ற நாடுகள் அனைத்தும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இந்திய தூதரகத்திற்குள் புகுந்த தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் காந்தஹார், ஹெராட் நகர்களில் மூடப்பட்டிருக்கும் இந்திய தூதரக அலுவலகங்களில் புகுந்து முக்கிய ஆவணங்கள் இருக்கிறதா என சோதனையிட்ட பின்பு, அங்கிருந்த இந்திய அரசுக்குச் சொந்தமான வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.