ஆப்கானிஸ்தான் நாட்டில் ஜவுளிக்கடைகளில் இருக்கும் பொம்மைகளுக்கு தலை இருக்கக்கூடாது, அனைத்தையும் வெட்டுங்கள் என்று தலிபான்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள், கைப்பற்றியதிலிருந்து, அங்கு பல அதிரடி கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். வேறு வழியின்றி மக்களும் அதனை ஏற்று வருகிறார்கள். இந்நிலையில், ஜவுளி கடைகளில் இருக்கும் பொம்மைகளுக்கு தலை இருக்க கூடாது என்று தலிபான்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.
This is Herat where the Taliban authorities have asked clothing shops to behead all “female mannequins” calling them “un-Islamic”. Herat was called “the pearl of Khurasan” by Rumi and has been considered the cultural capital of #Afghanistan. pic.twitter.com/CUBA6fSE74
— Zia Shahreyar l ضیا شهریار (@ziashahreyar) January 3, 2022
அதாவது, தலையோடு சேர்த்து பொம்மைகள் வைத்திருப்பது முஸ்லீம் மதத்திற்கு எதிரானது. எனவே, பொம்மைகள் தலையின்றி தான் இருக்கவேண்டும் என்று தலிபான்கள் உத்தரவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை ஏற்று கடைக்காரர்களும் பொம்மைகளின் தலையை வெட்டி வருகிறார்கள். இது தொடர்பான வீடியோ வெளியாகி இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.