Categories
உலக செய்திகள்

என்ன வேண்டுமானாலும் செய்வோம்…. தலிபான்கள் அறிக்கை…. கண்ணீரில் ஆப்கான்…..63 பேர் பலி …!

ஆப்கானிஸ்தானில் திருமண மண்டபத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 63 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் வருகின்ற செப்டம்பர் மாதம் 28_ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 6 ஆம் தேதி அங்குள்ள தலிபான் தீவிரவாத அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , இங்கு நடக்க இருக்கும் தேர்தல் மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் ஒரு நாடகமாகும். பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.இந்த தேர்தலை நிறுத்த நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.இதை தொடர்ந்து 7-ஆம் தேதி அங்கு நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றது. இந்நிலையில் நேற்று திருமண மண்டபத்தில் ஒரு தாக்குதல் அரங்கேறியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷாஷ்ர் இ துபாய் என்ற திருமண மண்டபத்தில் நடந்த விழாவில் ஒருவர் தாம் அணிந்திருந்த குண்டுகளை வெடிக்க செய்ததில் 63 பேர் பலியாகியுள்ளதாகவும் , 182_க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்ச செய்தி தொடர்பாளர் நஸ்ரத் ரஹிமி தெரிவித்தார்.

இந்த தற்கொலை தாக்குதல் எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை இது குறித்து விசாரணையை அந்நாட்டு அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் அம்ருல்லா சாலேவின் அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 24 பேர் கொடூரமாக கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |