Categories
உலக செய்திகள்

அமெரிக்க மக்களை வீடு வீடாக சென்று தேடும் தலீபான்கள்.. கர்ப்பிணி பெண் வெளியிட்ட தகவல்..!!

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் மாட்டிக்கொண்ட கர்ப்பிணி பெண் ஒருவர் அமெரிக்க மக்களை தலீபான்கள் தேடித்தேடி வேட்டையாடுவதாக தெரிவித்துள்ளார்.

கலிபோர்னியாவைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் நஸ்ரியா. இவர் ஒரு ஊடகத்தில் தன் அனுபவங்களை கூறியிருக்கிறார். அதாவது, கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு தன் குடும்பத்தினரை பார்ப்பதற்காகவும், தன் திருமணத்திற்காகவும் சென்றிருக்கிறார். எனினும், தற்போது அமெரிக்கா திரும்புவதற்கு வழியின்றி தவித்து வருகிறார்.

இவர், தலிபான்கள் அமெரிக்க மக்களை தேடிப்பிடித்து கொன்று வருவதாக கூறியிருக்கிறார். மேலும் அவர்கள் ஒவ்வொரு வீடாக தேடிச்செல்வதாகவும், எவரேனும் நீலநிற பாஸ்போர்ட் வைத்துள்ளார்களா? என்று பார்ப்பதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு முன்பு, அவர் அமெரிக்கா செல்லக்கூடிய விமானத்திற்கு முன்பதிவு செய்திருக்கிறார்.

எனினும், அது ரத்தாகிவிட்டது. அதன்பின்பு இவர், காபூல் நகரின் விமான நிலையத்திலிருந்து, புறப்படும் விமானத்தில், தன் கணவருடன் செல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், அமெரிக்காவின் பாஸ்போர்ட்டை காண்பித்தால், தலிபான்கள் எங்களை செல்ல அனுமதிக்க மாட்டார்கள் என்பது தெரியும் என்று கூறியுள்ளார்.

மேலும், நாங்கள் வீதிகளில் இரண்டு நாட்களுக்கு தூங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது, கூட்ட நெரிசலில், சிலர் மிதித்துச்சென்றார்கள். அது மிகவும் மோசமான அனுபவம் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |