Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் அட்டூழியம்.. 3 மாவட்டங்கள் தலீபான்களால் கைப்பற்றப்பட்டது..!!

ஆப்கானிஸ்தானில், தலீபான் தீவிரவாதிகள் 3 மாவட்டங்களை கடந்த சனிக்கிழமை அன்று இரவில் கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களாக அரச படையினருக்கும், தலீபான் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்த அமெரிக்க அரசு, மேற்கொண்ட ஒப்பந்தத்தில், தங்கள் படைகளை நாட்டிலிருந்து வெளியேற்றுவதாக தெரிவித்திருந்தது.

அதன்படி ஆப்கானிஸ்தானின் பக்ராம் என்ற மிகப்பெரிய விமானப்படை தளத்திலிருந்து 20 வருடங்கள் கழித்து சமீபத்தில் அமெரிக்கா தங்கள் படையை திரும்பப்பெற்றது. இதனால் ஆப்கானிஸ்தானில், தலீபான்களின் ஆட்டம் அதிகரிக்க தொடங்கியது. நாட்டின் முக்கிய மாவட்டங்களை தலீபான்கள் கைப்பற்றி வருகிறார்கள்.

அதன்படி தஜிகிஸ்தான் நாட்டின் எல்லைக்கு அருகில் இருக்கும் படாக்ஸ்கான் என்ற மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை அன்று இரவிலேயே சுமார் மூன்று மாவட்டங்கள் தலீபான்களால் கைப்பற்றப்பட்டது. தீவிரவாதிகள் அட்டகாசத்தில் ராணுவ வீரர்கள் சுமார் 300க்கும் அதிகமானோர் எல்லையை கடந்து தஜிகிஸ்தான் நாட்டிற்கு சென்றுவிட்டனர்.

படாக்ஸ்கான் மாகாணத்தில் கடந்த 3 தினங்களில், தீவிரவாதிகள் 10 மாவட்டங்களை கைப்பற்றி, 8 மாவட்டங்களில் மோதல் ஏற்பட்டு வருவதாக அம்மாகாண அரசின் மூத்த அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |