தலிபான் பயங்கரவாதிகள் சொன்னது போல் நடந்து கொள்ளாமல் ஆப்கானிஸ்தானில் உள்ள குழந்தைகளையும் பெண்களையும் சவுக்கால் அடித்து துன்புறுத்துவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தலிபான் பயங்கரவாதிகள் 20 வருடங்களுக்கு முன்பு இருந்தது போல் இல்லாமல் தற்போதைய ஆட்சியில் பெண்களுக்கு சம உரிமை கொடுப்போம் என்று பேட்டி அளித்திருந்தனர். ஆனால் தலிபான்கள் சொன்னது போல் நடந்து கொள்ளாமல் நேற்றே குழந்தைகளையும், பெண்களையும் ரத்தம் சொட்ட சொட்ட சவுக்கால் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
அதோடு மட்டுமில்லாமல் இந்த கொடூர சம்பவம் குறித்த படங்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பாக தலிபான் செய்தி தொடர்பாளரான Zabihullah Mujahid 20 வருடங்களுக்கு முன்பு இருந்தது போல் இல்லாமல் தாலிபான்கள் தற்போது பெண்களுக்கு ஷாரியா சட்டத்தின் கீழ் உரிமைகள் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் சொன்னது போல் நடந்து கொள்ளாமல் தலிபான்கள் காபூல் விமான நிலையத்திற்குள் நுழைவதற்காக சென்ற குழந்தைகளையும் பெண்களையும் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் சவுக்கால் தாக்கியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் திருமணமாகாத பெண்கள், 12 முதல் 45 வரை உள்ள பெண்கள், விதவைகள் உள்ளிட்டோரை தலிபான்கள் வீடு வீடாக சென்று பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.