Categories
உலக செய்திகள்

“காபூல் மாவட்டத்தில் புகுந்த தலீபான்கள்!”.. எங்கு இருக்கிறார்கள்..? வெளியான தகவல்..!!

தலீபான் தீவிரவாதிகள், காபூல் மாவட்டத்தில் புகுந்து, காபூல் நகரிலிருந்து 10 கி.மீ தொலைவில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகள் வெளியேறியதிலிருந்து, தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி மக்களை கொன்று குவித்து வருகிறார்கள். இதனால் பல மக்கள் தங்கள் ஊரைவிட்டு வெளியேறி வருகிறார்கள்.

இந்நிலையில், தலைநகர் காபூல் மாவட்டத்தில் தலிபான்கள் புகுந்துள்ளதாகவும், அவர்கள் காபூல் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் காபூலுக்கு தெற்கு பகுதியில் இருக்கும் பக்திகா என்ற மாகாணத்தையும் தலிபான்கள் கைப்பற்றி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |