Categories
உலக செய்திகள்

”தேர்தலை நிறுத்த என்ன வேண்டுமானாலும் செய்வோம்” தலிபான் எச்சரிக்கை …!!

ஆப்கானிஸ்தானில் நடைபெற இருக்கும் தேர்தலை நிறுத்த நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று தலிபான் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் வருகின்ற செப்டம்பர் மாதம் 28_ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது. அங்கு ஜனாதிபதியாக இருக்கும் அஷ்ரஃப் கானி இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.ஆப்கானிஸ்தானின்  துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் அம்ருல்லா சாலேவின் அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 24 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

Image result for taliban denounce afghanistan election warning

இந்நிலையில் இன்று அங்குள்ள தலிபான் தீவிரவாத அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கை அங்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில் , இங்கு நடக்க இருக்கும் தேர்தல் மக்களை    ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் ஒரு நாடகமாகும். இதில் நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரமும் வெளிநாட்டினரிடம் உள்ளது.பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.தேர்தல் பிரசார கூட்டங்களில் மக்கள் கலந்து கொள்ளாமல் இருப்பது  நல்லது.இந்த நாடகத்தனமான தேர்தலை நிறுத்த நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |