ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்களின் பதவியேற்பு விழாவிற்கு 6 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகள் வெளியேறிய தொடங்கியவுடன், தலிபான்கள் நாட்டை கைப்பற்றினார்கள். அதன்பின்பு, அங்கு புதிய அரசு அமைப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே, தலிபான்கள் பதவியேற்கப்போகும் நிகழ்விற்கு 6 நாடுகளை அழைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அவை, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் என்று தெரியவந்துள்ளது. இதில், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் தலிபான்கள், கடந்த 1990 காலகட்டங்களில் ஆட்சியமைத்த போது தங்களது ஆதரவை தெரிவித்திருந்தன. சீனா, ஈரான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தற்போது தலிபான்களின் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தன. எனவே, இந்த நாடுகளையும் பதவியேற்பு விழாவிற்கு தலீபான்கள் அழைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.