ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் சுமார் 33 நபர்களை கொன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அரசை எதிர்த்து தலீபான் தீவிரவாதிகள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்நாட்டின் அரசப்படையினருக்கு ஆதரவாக இருந்த அமெரிக்க படையினரும் வெளியேறினார்கள். இதனால் தலீபான்கள், நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி வருகிறார்கள். இந்நிலையில் தலிபான்கள் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளிலிருந்து 33 நபர்களை கொன்று கொடூர செயலை செய்துள்ளார்கள்.
இதில் பழங்குடியின மக்கள், சமூக ஆர்வலர்கள், செய்தியாளர்கள், மத பண்டிதர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள் போன்றோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும் காவல்துறையினர், மாகாண அரசின் அதிகாரிகள், ராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்களையும், கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.