ஆப்கானிஸ்தானில் காவல்துறை அதிகாரிகளால் கொல்லப்பட்ட 4 பேரை தலிபான் பயங்கரவாதிகள் கிரேன் மூலம் தூக்கி ஊரின் மத்தியில் தொங்க விட்டுள்ளார்கள்.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். அதோடுமட்டுமின்றி ஆப்கனை கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டில் பலவித கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்துள்ளார்கள்.
இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறை அதிகாரிகள் அதி பயங்கரமாக கொலை செய்துள்ளார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள ஹீரட் என்னும் நகரின் மத்தியில் காவல்துறை அதிகாரிகளால் சுட்டு கொலை செய்யப்பட்ட 4 பேரை தலிபான் பயங்கரவாதிகள் கிரேன் மூலம் கட்டி தொங்க விட்டுள்ளார்கள். இதனையடுத்து தலிபான்களின் இந்த கோர செயலைக் கண்ட அப்பகுதி மக்கள் பயங்கர பீதியிலுள்ளார்கள்.