நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த நிகழ்வில் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீங்க சென்னைக்கு வாருங்கள், எல்லா இடங்களிலும், சிக்னலில் நான் வண்டியை நிறுத்தும்போது கையேந்தி பிச்சை எடுக்கிற எல்லாரும் வட இந்தியர்கள் தான், இதிலிருந்து என்ன தெரிகிறது ? பிச்சை எடுக்கின்ற வேலை கூட இனி தமிழ்நாட்டில் தமிழனுக்கு இல்லை, அந்த வேலை கூட கிடைக்காது.
இதெல்லாம் எவ்வளவு பெரிய பேராபத்து, அவன் என்ன பண்ணுவான் என்றால் ? அவன் இந்த நாட்டின் அரசியலை, இந்த நிலத்தின் அரசியலை ஒரு தேசிய இனத்தின் அரசியலை அவர்கள் தீர்மானிப்பார்கள். அவன் யாருக்கு வாக்கு செலுத்துகிறார்களோ அவர்களிடம் அதிகாரம் வரும், அந்த திமிரில் அந்த இதில் தான் பிஜேபி நாங்கள் வருவோம், நாங்கள் வெல்வோம் என்று சொல்கிறது.
வட இந்தியர்கள் அத்தனை பேரும், காங்கிரசுக்கு கூட ஓட்டு போட மாட்டார்கள், பிஜேபிக்கு தான் போடுவார்கள். வட இந்தியர்கள் வேறு யாருக்கும் ஓட்டு போடுவார்கள், மோடிஜி என்று தான் பேசுவார்கள். முதலில் இந்தியை திணித்தார்கள், நாம் எதிர்த்தோம், இப்போ ஹிந்திகாரர்களை திணிக்கிறார்கள் நாம் வரவேற்கிறோம், தடுக்க முடியவில்லை. ஏனென்றால் வேலைக்கு ஆட்கள் இல்லை என தெரிவித்தார்.