காதுல ரத்தம் வர்ற மாதிரி பேசுறாங்க என்று பாக்யலட்சுமி சீரியல் நடிகர் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சீரியலில் இடம்பெற்றுள்ள கோபி கதாபாத்திரம் மனைவியை அவ்வப்போது திட்டி கொண்டே இருப்பார்.
அந்த வகையில் தற்போதும் ஒரு சம்பவத்தால் அவர் தன் மனைவியை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷை சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் திட்டி வருகின்றனர். நடிகர் சதீஷ் இதுகுறித்து தனது வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஆரம்பிச்சிட்டாங்க. யூடியூப்ல கிழிக்க தொடங்கிட்டாங்க. காதுல ரத்தம் வர்ற மாதிரி பேச்செல்லாம் பேசுறாங்க. ஆனா என்ன பண்றது. கதையில இன்னும் இந்த விட கஷ்டமான சீனெல்லாம் வரப்போகுது. தாங்குவேன். தாங்கனும். பாக்கியலட்சுமி சீரியல் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க இன்னும் நடிக்கப் போறேன்.
மேல. இதுக்கு மேல. வேற லெவல்ல நடிக்கப் போறேன். சினிமால மட்டும் தான் நடிப்பார்களா. சாரி, டிவி சீரியல்ல கூட நாங்க நடிப்போம். நான் சொல்றது கேக்குதா. புரியுதா என்று பதிவு செய்துள்ளார்.
https://www.instagram.com/p/CNZ5WShB4b0/?utm_source=ig_embed