Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இரண்டு விதமா பேசுறாங்க… கேடு கெட்டு போய் இருக்கு…. இந்த புத்தி முன்னாடியே இருக்கணும் …!!

7.5% உள்ஒதுக்கீடு மசோதாவாக நிறைவேற்றுவதற்கு முன்பு அதிமுகவுக்கு இருந்திருக்க வேண்டும் என முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை அடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க ஸ்டாலின், முத்துராமலிங்கத்தேவர் தமிழ் மொழி மீது அளவுகடந்த பற்று கொண்டவர். நாட்டினுடைய நலன்கருதி பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்தவர். அவருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்களுடைய வீரவணக்கத்தை செலுத்துகின்றோம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

7.5சதவீத இடஒதுக்கீடு எதிர்க்கட்சித் தலைவர் சொல்லி நாங்க கொண்டு வரவில்லை,  நாங்களாகவே செயல்படுத்தியுள்ளோம் என்ற கேள்விக்கு, எடப்பாடி தலைமையில் இருக்கக்கூடிய நிர்வாகம் மோசமாக, கேடு கெட்டு போய் இருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு உதாரணம். இதை மசோதாவாக நிறைவேற்றுவதற்கு முன்பு இந்தப் புத்தி அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். மசோதாவை ஏகமனதாக நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி, அதற்குரிய அழுத்தத்தை கொடுத்திருக்க வேண்டும். ஆகவே இதை கண்டித்து தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாங்கள் போராட்டத்தை நடத்தி மக்களுக்கு எடுத்துச் சொன்னோம் என்பது நாட்டுக்கு நன்றாக தெரியும்.

இதற்கு எடப்பாடி பழனிச்சாமி என்ன சொன்னார் ?  நான் அரசியல் செய்வதாக… திமுக அரசியல் செய்வதாக சொன்னார். நான் அப்போதே சொல்லி இருக்கிறேன், எதிர்க்கட்சியை பொறுத்தவரையில் அரசியல் செய்யாமல், அவியலா செய்துகொண்டிருக்கும் என்று நான் தெளிவாக விளக்கிச் சொல்லி இருக்கிறேன். இப்போதாவது இந்த அரசு அரசாணை வெளியிட்டுள்ளதை நான் வரவேற்கிறேன். ஆனால் அவர்கள் வெளியிட்டு இருக்கக்கூடிய அரசாணையை உடனடியாக….  காலம் தாழ்த்தாமல், கவுன்சிலிங்கை நடத்தி செய்லபடுத்தவேண்டும்.

இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் அதிலே சேரக்கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இரண்டு விதமான கருத்துக்கள் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது சட்டரீதியாக செல்லுமா செல்லாதா ? நீதிமன்றத்திற்குச் சென்றாள் இந்த அரசாணை நிற்குமா ? நிற்காதா ? என்ற ஒரு நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. எனவே இதையெல்லாம் பரிசீலித்து மாணவர்களுடைய நலன் கருதி அரசு பள்ளி மாணவர்கள் நலன் கருதி 7.5 சதவீதம் கிடைக்கக் கூடிய சூழ்நிலையை இந்த அரசு ஏற்படுத்த வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்தி, வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என முக ஸ்டாலின் தெரிவித்தார்.

Categories

Tech |