Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்னும் கேவலமா கூட பேசுவாங்க…! டிஜிபி வேடிக்கை பார்த்துகிட்டு இருக்காரு..! C.Mக்காக வேதனைப்பட்ட புகழேந்தி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, நானு,  அண்ணன் வைத்தியலிங்கம், மிஸ்டர் மனோஜ் பாண்டியன், மிஸ்டர் ஜே.டி.சி பிரபாகரன் நாங்க எல்லாரும் இருந்தோம். ஆனால்  என்ன பொறுத்த வரைக்கும் எந்த ஆவணங்களோ, போய் கார்ல வச்சதையோ நான் பாக்கல. நம்ம பார்வை உள்ள இருக்கும். கீழ இருக்கின்ற ஆபீஸ் ரைட் சைடுல ஓபிஎஸ் அண்ணன் ரூம். லேப் சைட்ல இபிஎஸ் ரூம். மேல அம்மா ரூம். அம்மா ரூமுக்கு யாரும் போகவே இல்ல.

மேலே யாரும் ஏறவே இல்லை. கைய காமிச்சிட்டு கீழ இறங்கிட்டாரு. செயற்குழு எல்லாம் நடக்கும் அந்த ஹாலுக்கு அண்ணன் போகலை.  நாங்களும் கீழே வந்துட்டோம். அந்த இடைப்பட்ட நேரத்தில் தான் அவருடைய ரூம்லயும், அந்த இடத்துல இருந்து சிதறிய டாக்குமெண்ட்ஸ்..   சிதறி கிடந்ததையெல்லாம் எடுத்துட்டு வந்து வச்சு அது எங்க கிட்ட தான் இருந்தது,  பத்திரமா. அதுல ஒண்ணுமே கிடையாதுன்னு திருப்பி கொடுத்துட்டோம் சார்.

அதிமுக அலுவலகத்தில் உள்ள ஆவணகள் எந்த வாகனத்திலாவது  ஏத்திருக்கிறது நீங்க பார்த்து இருந்தா, அந்த டாக்குமெண்ட்டும் ,  கொடுத்த டாக்குமெண்ட்டும் ஒன்னு தான். மாற்றமே இல்லை. நம்ம லாயர்ஸ்… எங்க கையில இதுதான் இருக்கு என சொல்லி நாங்க கொடுத்துட்டோம்.அங்கே  திருடு போக என்ன இருக்குன்னு எனக்கு தெரியல ? அது என்ன டாக்குமெண்ட்னு எனக்கு புரியல.

சிவி.ஷண்முகம் முதல்வரை கடுமையாக பேசுகிறார், முதல்வர் குடும்பத்தை பேசுகின்றார். டிஜிபி வேடிக்கை பார்க்கிறார். கொடநாடு கொலை வழக்கு போல அதையும் தள்ளி விடுகிறீர்கள். பேசுறவன் பேசட்டும் இப்ப எங்களுக்கு என்ன ? பேசுறது உங்களை தான் பேசுறான். ஏன் புகழேந்தி  அடிச்சிக்கிறார் என்று கேட்பான் எவனாச்சும். இது நடைமுறைக்கு சரியில்லை.

எங்க மேல கேஸ் பாயுது, எஃப் ஐ ஆர் வருது, எங்கேயோ ஒரு மூலைல சங்கரன்கோவில்ல பேசினா,  அந்த தம்பியை புடிச்சு உள்ள போடுறாங்க. உங்கள வாயில வந்தபடி, எந்த வார்த்தையை யூஸ் பண்ணி எப்படி பேசினாலும் நீங்க அமைதியா இருக்கீங்க அப்படின்னா  இருங்க. அவன் பேசிட்டு போகட்டும். இன்னும் கேவலமா கூட பேசுவான். நாலு முதலமைச்சர் என எல்லாரு பேரையும் சொல்லியாச்சு. ஆகவே உங்க போலீஸ் வேடிக்கை பார்க்கட்டும்.  எங்கள மாதிரி ஆளுங்க மேல  உங்கள் நடவடிக்கை பாயட்டும் என தெரிவித்தார்.

Categories

Tech |