செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வீடு இல்லாதவர்களுக்கு வீடு, கேஸ் அடுப்பு இல்லாதவர்களுக்கு கேஸ் அடுப்பு கொடுக்க வேண்டும், குடிநீர் வசதி இல்லாதவர்களுக்கு குடிநீர் பைப் மூலமாக கொண்டு வந்து கொடுக்க வேண்டும், வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு 42 கோடி பேருக்கு வங்கி கணக்கு கொடுக்கணும், இதை எப்போதும் கூட அரசு இலவசம் என்கின்ற வார்த்தையில் சொல்லவில்லை. இது மக்களுடைய உரிமை. அது மக்களுக்கு கொடுக்க வேண்டியது அரசனுடைய கடமை, அரசு செய்து கொண்டிருக்கிறது.
சுப்ரீம் கோர்ட் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, பைனான்ஸ் செகரட்டரி, எலெக்சன் கமிஷன் ஆப் இந்தியா, நித்தி ஆயோக், டிஎம்கே போன்ற கட்சிகள் அவர்களும் இம்ப்ளிட் ஆகி இருக்கிறார்கள். இவர்கள் சொல்லுகின்ற இலவசம் என்பது வேறு, இவர்கள் சொல்லுகின்ற இலவசம் இன்றைக்கு ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு அறிவித்திருக்கிறார்கள்… தேர்தல் வரப்போகிறது, ராஜஸ்தானில் இருக்கக்கூடிய அனைத்து இல்லத்தரசிகளுக்கு ஒரு செல்போன் இலவசம், செல்போனில் வருகின்ற டேட்டா இலவசம்.
தமிழ்நாட்டில் எதுவுமே நம்மால் செய்ய முடியாது என்று தெரிந்தும் கூட 506 தேர்தல் அறிக்கையில் அள்ளி தெளித்து இருக்கிறார்கள், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று… எந்த விதமான நிதியை பற்றி யோசிக்காமல். இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குகிறது. மக்களை ஏமாற்றி அதன் மூலமாக ஆட்சிக்கு வருகின்றார்கள் என்பதுதான்.
ஆனால் தமிழகத்தில் தொடர்ந்து ஒரு வார காரணமாக இங்கே இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள், சில தொலைக்காட்சியாளர்கள் இதையே வைத்து பேசுகிறார்கள். மோடி அவர்கள் கொடுத்தது இலவசம் கிடையாது, மோடி அவர்கள் கொடுத்த வீட்டிலிருந்து, கேஸ் அடுப்பில் இருந்து, அது மக்களுக்கு அவருடைய உரிமையாக, இந்த அரசினுடைய கடமையாக அது கொடுத்திருக்கின்றார்கள் என விளக்கம் அளித்தார்.