Categories
அரசியல் தேசிய செய்திகள்

10 MLA கிட்ட பேசிட்டாங்க…! பஞ்சாபில் பாஜக குறி… ஆம் ஆத்மி ஆட்சிக்கு சிக்கல் ? குண்டை தூக்கி போட்ட கெஜ்ரிவால் ..!!

பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி பொறுப்பை ஏற்றது முதல் எதிர்க்கட்சி ஆட்சி நடந்து வரும் மாநிலத்தில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி, அங்குள்ள எம்எல்ஏக்களை தங்கள் வசம் இழுத்து ஆட்சியை கவிழ்த்து, பாரதிய ஜனதா ஆட்சியை நிலைநாட்டி வருகிறது. இந்தியா முழுவதும் பல நிகழ்வுகள் இது போல் அரங்கேறியுள்ளனர். அது தொடர்பாக அண்மையில் கூட டெல்லி மாநில அரசை பாஜக கவிழ்க்க நினைப்பதாக குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே போல தற்போது ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்றுவரும் பஞ்சாபில் அரசை கவிழ்க்க பாஜக திட்டமிட்டுள்ளதாக டெல்லி மாநில முதல்வரும்,  ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவால் பரபரப்பு குற்றசாட்டை பாஜக மீது வைத்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும், 10 எம்எல்ஏக்களை பாஜக தொடர்பு கொண்டு உள்ளதால்,  ஆட்சியை உடைக்க முயன்றுள்ளதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |