பிரிக்ஸ் மாநாட்டில் அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்யாவில் இந்திய கடைகளை திறப்பது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாக கூறியிருக்கிறார்.
14-ஆம் பிரிக்ஸ் மாநாட்டில் ஐந்து நாடுகள் கலந்து கொள்கிறது. ரஷ்யா மற்றும் சீன நாடுகளின் அதிபர்கள் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூவரும் காணொலிக் காட்சி மூலமாக அதில் கலந்துகொள்கிறார்கள். தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளின் அதிபர்களும் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்ததாவது, பிரிக்ஸ் நாடுகளில் ரஷ்ய நாட்டின் இருப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்திய கடைகளை ரஷ்ய நாட்டில் தொடங்குவது பற்றியும், சீன வாகனங்கள், ஹார்டுவேர் பொருட்கள், உபகரணங்கள் போன்றவற்றின் பங்கை ரஷ்ய சந்தையில் அதிகரிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
ரஷ்ய நாட்டின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் தங்களின் செயல்பாடுகளை அதிகப்படுத்தி கொண்டிருக்கின்றன என்று கூறியுள்ளார்.