‘இந்தியன் 2’ நாயகியாக த்ரிஷா மற்றும் சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து இருக்கிறார். இதனையடுத்து, இவர் திருமணத்திற்குப் பின்பும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். அந்த வகையில், இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ”இந்தியன் 2”படத்தில் நடிக்க இருந்தார்.
இந்நிலையில், இவர் தற்போது இந்த படத்தில் இருந்து விலகுவதாக தகவல் வெளியான நிலையில், இந்த படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதிலாக முன்னணி நடிகையான த்ரிஷா மற்றும் சமந்தாவிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.