Categories
உலக செய்திகள்

கின்னஸ் புத்தகத்தில் புதிய இடம்… உலகிலேயே மிக உயர்ந்த பெண்… வெளியான முக்கிய தகவல்..!!

துருக்கியை சேர்ந்த ரமிசா கெல்கி என்ற பெண் உலகின் மிக உயரமான பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலக அளவில் புதிய சாதனை புரிபவர்களின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று வருகிறது. அந்த வகையில் துருக்கியை சேர்ந்த ரமிசா கெல்கி (24) இந்த ஆண்டுக்கான உயரமான பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் சிண்ட்ரோம் என்ற அரியவகை நோயால் கெல்கி பாதிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு பக்கவிளைவாக இந்த அதீத உயர வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டிற்கான மிக உயரமான பெண் என்ற சாதனையுடன் கெல்கி 7 அடி 0.7 இன்ச் உயரத்துடன் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

மேலும் கடந்த 2014-ஆம் ஆண்டு கெல்கி இதற்கு முன்னதாக உயரமான இளம்பெண் எனவும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இதற்கிடையே “உடல் சார்ந்த பிரச்சனைகளுடனே நான் பிறந்ததிலிருந்து வளர்ந்து வந்தேன். அதன் பிறகு “ஸ்கோலியோசிஸ்” என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டதன் காரணமாக அதீத உயரத்தையும் அடைந்தேன். அதேசமயம் தான் ஒரு மாற்றுத்திறனாளி. எனவே சக்கர நாற்காலி உதவி இன்றி என்னால் எங்கும் செல்ல இயலாது” என்று ரமிசா கெல்கி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |