ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து உலக நாடுகள் அங்கிருந்த தங்களது தூதரகத்தை காலி செய்ததை மீண்டும் திறப்பதற்கு அந்நாட்டில் தலிபான்களால் அமையப்பெற்ற புதிய ஆட்சியின் துணை பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றி அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதுமே உலக நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கையின் காரணமாக அங்கிருந்த தங்களது தூதரகத்தை மூடியுள்ளது.
இந்நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்களால் அமையப்பெற்ற புதிய ஆட்சியின் துணைத்தலைவர் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் தூதரக அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது காபூலில் இருந்து தங்களது தூதரகத்தை மூடிய உலக நாடுகள் மீண்டும் அதனை திறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.