Categories
சினிமா

ஊரடங்கில்….!! ”என் வாழ்க்கை இப்படி தான்” இன்ஸ்டாவில் நடிகை தமன்னா …!!

நடிகை தமன்னா ஊரடங்கு எவ்வாறு கழிகிறது என்பதை பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கதாநாயகியாக திகழ்பவர் தமன்னா. தமிழில் பாகுபலி பையா அயன் ஸ்கெட்ச் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து அடித்தட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஆனால் அன்றாடம் வேலைகளுக்கு சென்று இயந்திரம் போல் இருந்தவர்கள் ஓய்வெடுக்கவும், குடும்பத்தினருடன் நேரத்தை போக்கவும், பயனுள்ள செயல்களைச் செய்யவும் இது சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்நிலையில் தமன்னா இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட பதிவில் “இப்படி ஒரு அருமையான வாய்ப்பு மீண்டும் கிடைக்காது எனவே இந்த நேரத்தில் பயனுள்ள செயல்களில் நேரத்தை செலவிட மனசு சொல்கிறது மறுபுறம் இப்படி ஒரு அருமையான வாய்ப்பு கிடைக்காது அதனால் நன்றாக தூங்கி ஓய்வெடு என்றும் சொல்கிறது இப்படியே இரு மனதுடன் எனது ஊரடங்கு வாழ்க்கை இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |