என்னுடன் நடிக்கும் கதாநாயகன் சக நடிகர் மட்டுமே அவருடன் நட்பு ரீதியாக கூட பழகவில்லை என்றும் , காதல் வந்தால் சொல்லுவேன் என்றும் கூறினார்.
தமிழ் தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து அதில் குறிப்பாக தமிழகத்தில் தனக்கென தனிக் கால் தடம் பதித்தவர் நடிகை தமன்னா. இவர் தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தனது சினிமா உலக பயணம் பற்றி பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியின் போது பேட்டியாளர் தமன்னாவிடம் உங்களுக்கு ஜோடியாக நடித்த ஒரு கதாநாயகனை நீங்கள் காதலித்தது உண்மையா ? என்று கேட்டார்.
உடனே கடுப்பாகிய தமன்னா பின்னர் சமாளித்துக் கொண்டு சிரித்தபடி அந்த நடிகர் எனக்கு வெறும் சக நடிகர் மட்டுமே மேலும் அவருடன் நட்பு ரீதியாக கூட நெருங்கிப் பழகவில்லை என சாமர்த்தியமாக பதில் அளித்தார். இது மட்டுமின்றி எனக்கு காதல் வந்தால் அதை மறைக்காமல் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வேன் என்றும் கூறினார்.