Categories
சினிமா தமிழ் சினிமா

“எனது ஆசையை நிறைவேற்றினார் சுந்தர்.சி”… தமன்னா உருக்கம்..!!

பாகுபலியில் தான் விரும்பியது நிறைவேறாமல்போன நிலையில் ‘ஆக்‌ஷன்’ படத்தில் அதனை நிறைவேற்ற வாய்ப்பளித்து தனது கனவை சுந்தர். சி நனவாக்கியதாக நடிகை தமன்னா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

சுந்தர். சியுடன் பணியாற்ற மிகவும் விருப்பமாக இருந்தாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். ‘ஆக்‌ஷன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில், நடிகை தமன்னா பேசுகையில், “ஒவ்வொரு படத்திலும் என்னை வித்தியாசமான கதாபாத்திரங்களில் பார்த்துவருகிறீர்கள். இயக்குநர் சுந்தர். சியுடன் பணியாற்றும் வாய்ப்பு இனிமேல் கிடைக்குமா என்று தெரியாது. அவருடன் பணிபுரிய மிகவும் விருப்பமாக இருந்தேன்.

பாகுபலி படத்தில் சண்டைக் காட்சிகள் நிறைய இருக்குமென்று ஆவலாக இருந்தேன். அந்தக் கனவை ஆக்‌ஷன் படத்தின் மூலம் சுந்தர். சி நிறைவேற்றியுள்ளார். மற்ற படங்களைவிட இப்படத்தில் நடித்த அனுபவம் புதுமையாக இருந்தது.

Image result for tamanna sundar c

ஏனென்றால், இப்படத்தில் ஆக்‌ஷன் கதாபாத்திரமென்பதால் நடிப்பு மிகக் குறைவு. படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் அந்த இடத்திற்கு செல்லுங்கள், இந்த இடத்தில் நில்லுங்கள் என்றுதான் சூழ்நிலை இருக்கும். அனைத்து சண்டைக் காட்சிகளிலும் விஷாலுக்குப் பின்னால்தான் நிற்பேன். அவருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி” என்றார்.

Categories

Tech |