திண்டுக்கல்லில் புளி விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் புளி பறிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் புளிய மரங்கள் அதிக அளவில் உள்ளன. மேலும் புளி அதிகம் விளையும் பகுதிகளில் திண்டுக்கல் மாவட்டமும் ஒன்றாகும். இந்த மாவட்டத்தில் விளையும் புளிக்கு தமிழ்நாட்டில் அதிக மவுசு உள்ளது. இந்நிலையில் கோபால்பட்டி, நத்தம், கணவாய்பட்டி, சாணார்பட்டி ஆகிய பகுதிகளில் புளி விளைச்சல் அமோகம் அடைந்துள்ளது. இதனால் அங்குள்ள விவசாயிகள் புளி பறிப்பு பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந்த புளிகள் பறிக்கப்பட்டு, பாலீதீன் பையில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த புளிகளை தொழிலாளர்கள் வெயிலில் போட்டு காய வைத்து, அதன் விதை மற்றும் தோலை நீக்கி விற்பனைக்காக கொண்டு செல்கின்றன. இந்த விற்பனையை விவசாயிகள் நேரடியாகவும், வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதியும் செய்து வருகின்றனர். புளி பறிப்பு காலம் தீவிரமடையும்போது புளியின் விலை குறைவு என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.