பண்டைக் காலத்திலிருந்தே நம்மிடம் 12 வகையான உணவுப் பழக்கங்கள் இருந்தது. தற்போது அது குறைந்து கொண்டே போகிறது . இதில் நீங்கள் எந்த மாதிரி உணவுப் பழக்கம் உள்ளவர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
1. அருந்துதல் – மிகக் கொஞ்சமாகச் சாப்பிடுவது.
2. உண்ணல் – பசி தீர சாப்பிடுவது.
3. உறிஞ்சுதல் – நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல்.
4. குடித்தல் – நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல்.
5. தின்றல் – பண்டங்களை மெதுவாக கடித்துச் சாப்பிடுதல்.
6. துய்த்தல் – உணவை ரசித்து மகிழ்ந்து உண்ணுதல்.
7. நக்கல் – நாக்கினால் துழாவித் துழாவி உட்கொள்ளுதல்.
8. பருகல் – நீர் கலந்த பண்டத்தை கொஞ்சம் குடிப்பது.
9. மாந்தல் – ரொம்பப் பசியால் மடமடவென்று உட்கொள்ளுதல்.
10. கடித்தல் – கடினமான உனவுப் பொருளை கடித்தே உண்ணுதல்.
11. விழுங்கல் – வாயில் வைத்து அரைக்காமல் அப்படியே உள்ளே தள்ளுவது.
12. முழுங்கல் – முழுவதையும் ஒரே வாயில் போட்டு உண்பது.