முதல்முறையாக தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு நடிகை அமெரிக்க ராணுவத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2021-ஆம் வருடத்தில் சமூகக் கருத்தை மையமாகக் கொண்டு திகில் திரைப்படமாக வெளிவந்தது, ‘காதம்பரி’. இத்திரைப்படத்தில் அகிலா நாராயணன் என்பவர் கதாநாயகியாக அறிமுகமானார். அமெரிக்காவில் வசிக்கும் இவர் கலை மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்ததால், தனியாக முயற்சி மேற்கொண்டு தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகியிருந்தார்.
நடிப்பு மட்டுமின்றி பிரபல பாடகியாகவும் இருக்கும் அகிலா நாராயணன், ராணுவத்தில் சேர வேண்டும் என்று தீர்மானித்தார். அமெரிக்க ராணுவத்தில் மிக கடுமையான பயிற்சிகள் இருக்கும். அதில், பட்டம் பெறுவது என்பது மிகவும் சவாலான ஒன்று. இந்நிலையில் அகிலா நாராயணன் பல மாதங்களாக கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வெற்றிகரமாக பட்டம் பெற்று அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக சேர்ந்துவிட்டார்.
இதன் மூலமாக அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்த முதல் தமிழ் நடிகை என்ற பெருமை அகிலா நாராயணனை சேர்ந்திருக்கிறது. அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு சட்ட ஆலோசகராக பணிபுரிய உள்ள அகிலா நாராயணன், தான் வாழும் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறார். எனவே, இவருக்கு பல தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.