ஈரோட்டை சேர்ந்த பெண்ணிற்கு துபாய் தமிழ் ஆராய்ச்சியாளர் விருது கொடுக்கப்பட்டது.
துபாய் மெரினா தேசர்ட் ரோஸ் கப்பலில் பலதுறைகளில் சாதனை படைத்தவர்களுக்கும், வணிகர்களுக்குமான பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு ஒருங்கிணைந்த பிரிவில் விருதுகள் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் முதல் பெண் தமிழ் ஆராய்ச்சியாளர் விருதை ஈரோட்டைச் சேர்ந்த மு.ஸ்ரீரோகிணிக்கு ஷேக் ஹமீது பின்காலித் அல் காசிமி, மாயா அல் ஹவாரி ஆகியோர் வழங்கினார்கள். இந்த விருதை பெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சியாளரான ஸ்ரீ ரோகிணி 25 ஆண்டுகளாக தமிழ் கலை மற்றும் இலக்கியத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிகழ்ச்சியில் அமீரகவாசிகள், பல்வேறு விருந்தினர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.