Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் சினிமா…. இதோ வருகிறேன்…. தளபதி 65 ஹீரோயின் மகிழ்ச்சியுடன் ட்விட்…!!

விஜய் படத்தில் நடிக்க இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று பூஜா ஹெக்டே பதிவிட்டுள்ளார்.

முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜயின் “தளபதி65” தயாரிக்கப்பட உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தது.

இந்நிலையில் பூஜா ஹெக்டே இதுகுறித்து கூறியதாவது, விஜயுடன் இணைந்து இது போன்ற பிரம்மாண்ட திரைப்படத்தில் நடிக்க இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. படப்பிடிப்புக்காக காத்திருக்கிறேன். தமிழ் சினிமா, இதோ நான் வருகிறேன் என்று அவரது ட்விட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே வின் ஜோடியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |