இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக தயாரிக்க இருக்கின்ற திரைப்படத்திற்கு நடிகை ராஷ்மிகா மந்தனாவை நிராகரித்து அவருக்கு பதிலாக நடிகை அஞ்சலியை தேர்ந்தெடுத்துள்ளார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் ராம்சரண் ஆவார். இவர் இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக இயக்க இருக்கின்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். மேலும் அந்தப் படத்திற்கு கதாநாயகியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை இயக்குனர் ஷங்கர் தேர்ந்தெடுத்துள்ளார். இதனையடுத்து மற்றொரு நாயகியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் இயக்குனர் ஷங்கர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஆனால் நடிகை ராஷ்மிகா மந்தனா அதிக அளவு தொகையை சம்பளமாக கேட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார். இதன் காரணமாகவே இயக்குனர் ஷங்கர் நடிகை ராஷ்மிகா மந்தனாவை நிராகரித்துவிட்டார். அதன்பின் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக நடிகை அஞ்சலியை தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.