தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நடிகை ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ஷெரின் ஆவார். இவர் “துள்ளுவதோ இளமை” என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். இதனை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். பின்னர் சில நாட்கள் கழித்து விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஷெரின் கூறுவதாவது “எனக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.