தமிழக லாரி ஓட்டுனர்கள் 900_த்திற்கும் அதிகமானோர் காஷ்மீர் பனி பொழிவில் சிக்கியுள்ளார்.
ஜம்முவில் கடும் பனி பொலிவு நிலவி வருகின்றது. அங்குள்ள ஸ்ரீநகர் , காஷ்மீர் , லடாக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பனி பொலிவின் தாக்கத்தில் இருந்து தப்பவில்லை. இதனால் அங்குள்ள சாலைகள் பனியால் மூடி பொதுமக்களில் இயல்புநிலை முற்றிலும் முடங்கியுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சார்ந்த லாரிகள் சரக்குகளை ஏற்றி , இறக்க சென்ற நிலையில் பணியின் தாக்கத்தால் முடக்கப்பட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட 450_க்கும் மேற்பட்ட தமிழக பதிவு எண் கொண்ட லாரிகள் திரும்பி வர இயலாமல் பணியில் சிக்கியுள்ளதாகவும் , இதில் 900 ஓட்டுனர்கள் தவிப்பதாகவும் தகவலாகிய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அங்குள்ள லாரி ஓட்டுனர்கள் கூறுகையில் , கடந்த 12 நாட்களாக உணவு இல்லாமல் கடுமையான குளிரில் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கின்றோம். நாங்கள் கொண்டு வந்த உணவு தீர்ந்து விட்டது. சிலருக்கு குளிர் தாங்காமல் வலிப்பு வந்து விட்டது. எனவே எங்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் அவர்கள் சொன்ன வேதனையான விஷயம் வேதனை அங்குள்ள போலிஸாரிடம் உதவி என்று கேட்டால் ஹிந்தியில் அடிக்க வருகின்றார்கள் எங்களுக்கு யாரும் உதவ வில்லை , எங்களுக்கு உதவுங்கள் என்று தெரிவித்தது அனைவரின் நெஞ்சையும் பதைக்க வைக்கின்றது. தமிழக லாரி ஓட்டுனர்களை மீட்க தமிழக அதிகாரிகள் காஷ்மீர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.