Categories
உலக செய்திகள்

கனடா பல்கலைக்கழகத்தில் முதன் முறையாக தமிழ் இருக்கை.. பெருமை பெற்ற நகரம்..!!

கனடாவின் ரொரன்றோ நகரின் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பது உறுதியாகியுள்ளது. 

கனடாவில் தமிழ் குழுக்கள் மற்றும் ரொரன்றோ பல்கலைகழகமும் சேர்ந்து கடந்த 2018 ஆம் வருடத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவியது. அதில் தமிழ் கல்விக்கான இருக்கை அமைப்பதற்கான திட்டம் முதன்முதலாக கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது அதற்கு வேண்டிய நிதி திரட்டப்பட்டு இருக்கை அமைவது உறுதியாகியுள்ளது.

அதன்படி கனடாவிலேயே பல்கலைக்கழகம் ஒன்றில் தமிழ் கல்விக்காக இருக்கை அமைக்கும் முதல் நகரம் என்ற பெருமையை ரொரன்றோ பெற்றிருக்கிறது. அதாவது இந்தியாவிற்கு அடுத்ததாக அதிக தமிழர்கள் வசிக்கும் நாடு கனடா ஆகும். அங்கு மூன்று இலட்சத்திற்கும் அதிகமாக தமிழ் மக்கள் வசிக்கிறார்கள்.

அவர்கள் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலிலிருந்து சென்றவர்களாம். தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் தொடர்புடைய ஆராய்ச்சிகளை நடத்துவதற்காகவும், கல்வி உதவித் தொகை வழங்குவதற்காகவும் இந்த இருக்கை கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு சுமார் 3 மில்லியன் டாலர்கள் நிதி கிடைத்திருக்கிறது.

இதுகுறித்து ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் Scarborough கேம்பஸ் தலைவர் Wisdom J Tettey  தெரிவித்துள்ளதாவது, இந்த இருக்கைக்கு தகுந்த தலைவரை உலகம் முழுக்க தேடவுள்ளோம். அவர், சிறந்த நற்பெயர் உடையவராகவும், ஆராய்ச்சிகள் மேற்கொள்பவராகவும், சமுதாயத்துடன் ஒருங்கிணைந்து பணியாற்றுபவராகவும் இருக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |