ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவி பேரரசு வைரமுத்து. இந்தி மொழி தன்மை என்ன செய்து விடப் போகிறது ? என்று அந்த மொழியை தங்களுக்குள் அனுமதித்த மொழிகள்…. காலப்போக்கில் என்ன ஆகின ? மூலமொழி சிதைந்து, திரிந்து, அழிந்து, கழிகிறது. அந்த இடத்தில் இந்தி வந்து உட்காருகிறது. இதுதான் நடக்கிறது. தமிழுக்கும் இப்படி நேர்ந்துவிடும் என்று பலபேர் கனவு காண்கிறார்கள். தமிழ் தீ, அதில் ஈ மொய்க்காது.
தமிழ் ஒரு கருங்கல் சிற்பம், அதை கரையான் அரிக்காது, இதை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த மொழியை நம்முடைய அடையாளமாக கருதுகிறோம், வரலாறாக கருதுகிறோம், தமிழை வெறும் மொழியாக மட்டுமே தமிழன் கருதுவதில்லை. தமிழ் தான் ஒரு இனத்தின் வயது, தமிழ் தான் மொழியின் வரலாறு, தமிழ் தான் ஒரு இனத்தினுடைய பண்பாடு, தமிழ் நமது அடையாளம். அது மட்டுமல்ல இந்திய ஒன்றியத்தில் தமிழ் தான் தமிழர்களின் அதிகாரம், அதை திணிப்பது சர்வாதிகாரம் என்று நாங்கள் கேட்கிறோம்.
மற்ற மொழிகளுக்கு இல்லாத ஒரு பற்று தமிழ் மொழிக்கு மட்டும் ஏன் தமிழனுக்கு வருகிறது ? என்று ஒரு கேள்வி எழுகிறது. வங்காளிக்கு இந்த தீங்கு இல்லையா ? கன்னடத்திற்கு இல்லையா ? மலையாளத்துக்கு இல்லையா ? மற்ற மொழிகளுக்கு இல்லையா ? தமிழனுக்கு மட்டும்தான் இவ்வளவு தீங்கு என்று தவிக்கிறார்களே, தமிழர்கள் மட்டும்தான் தீக்குளிக்கிறார்களே, தமிழர்கள் மட்டும்தான் தமிழ் என்றால் துடிக்கிறார்களே, வேறு தேசிய இனங்களுக்கு இல்லாத ஒரு வலி, வேறு தேசிய இனங்களுக்கு இல்லாத ஒரு பெரிய பற்று, பிடிமானம், வெறி ஏன் தமிழனுக்கு மட்டும் இருக்கிறது ? என பெருமைப்பட பேசினார்.