இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டிருந்த புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 11 பேர் விசைப்படகுகளில் கடந்த மாதம் மீன் பிடிக்க சென்றார்கள். அப்போது இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தார்கள். அதன்பிறகு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள் 11 பேரும் விசாரணைக்காக அந்நாட்டில் இருக்கும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
அதன் பிறகு நீதிபதி வழக்கை விசாரித்துவிட்டு மீனவர்கள் 11 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். அவர்களின் படகுகள் இரண்டையும் அரசுடமையாக்குவதற்கும் அவர் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.