இலங்கை அரசாங்கம் தங்கள் கடற்படையால் கைப்பற்றப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை ஏலம் விட தீர்மானித்திருக்கிறது.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி, அவர்களின் நாட்டுப்படகு, விசைப்படகு உட்பட சுமார் 105 படகுகளை இலங்கை கடற்படை கைப்பற்றியது. இந்நிலையில் இந்தப் படகுகள் அனைத்தையும் அரசுடமையாக்கி ஏலத்தில் விற்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை கைப்பற்றப்பட்ட 105 படகுகளும் இலங்கையில் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது.