Categories
மாநில செய்திகள்

தமிழுக்கு திராவிடம் என்று பெயர்.. முருகனுக்கு பெயர் மாற்றியது ஏன்..! சர்சையை கிளப்பும் வைரமுத்து …!!

ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவிஞசர் வைரமுத்து, சிவபெருமான் படைத்த மொழியாம் இரண்டும். சிவபெருமான் உடுக்கை எடுத்தாராம். ஒரு பக்கம் தட்டினார் தமிழ் பிறந்தது, மறுபக்கம் தட்டினார் சமஸ்கிருதம் பிறந்தது என்று ஆன்மீகவாதிகள் தமிழுக்கு,  ஒரு அழகான புனைவு வைத்திருக்கிறார்கள். அது எங்களுக்கு மகிழ்ச்சி தான்.

கடவுள் படைக்கும் போதே தமிழை முதலில், சமஸ்கிருதத்தை அடுத்து படைத்துவிட்டார் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி தான். இரண்டும் ஒரே உடுக்கையின் ஒலியில் பிறந்த மொழிகள் என்றால் ? சமஸ்கிருதத்திற்கு ஏன் அவ்வளவு செலவு ? தமிழுக்கு ஏன் இத்துனூண்டு செலவு ?

முருகு என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள். அன் விகுதி பெற்று முருகன் ஆயிடுச்சு. முருகன் என்றால் அழகன் என்று பொருள். அந்த முருகனை நீங்கள் ஏன் சுப்பிரமணியன் என்று மாற்றினீர்கள் ?  சுப்ரமணியன் என்றால், நேற்று வந்த கடவுள் என்று ஆகிவிடும். முருகன் என்றால் குன்று என்று பிறந்ததோ, அந்த குன்றில் தமிழன் என்று பிறந்தானோ, அன்று முதல் அந்த முருகனுக்கு வரலாறு வந்துவிடுகிறது.

அந்த முருகன் செய்த தொழில் வருகிறது, யானையை எறிவதற்கு வேலு தான் ஆயுதம். அந்த ஆயுதத்தை முருகன் தாங்கி இருக்கிறான் என்ற வரலாறு, பண்பாடு, தொன்மம், புனைவு எல்லாம் வருகிறது. அந்தப் பெயர் மாறுகிறபோது வரலாறே மாறி போகிறது. அதனால் பெயரில் என்ன இருக்கிறது என்று கேட்பவர்களை ? பெயரில்தான் எல்லாம் இருக்கிறது என்று சொல்லுங்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |