தமிழை ஆட்சி மொழியாக மாற்ற முழுமூச்சோடு பயணிக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்.பிகளுக்கான பதவியேற்பு விழா இரண்டாவது நாட்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது. அதில் இன்றைய நிகழ்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 39 எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்ற அனைவரும் தமிழ்மொழியிலே பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
மேலும் பதவிப்பிரமாணத்தின் இறுதியில் தமிழ் வாழ்க என்ற முழக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். இது இந்திய அளவில் டிரெண்ட் ஆகி அனைவரிடமும் பாராட்டை பெற்று வருகிறது. இதற்கு தொடர்ந்து ஆதரவாக பலரும் பேசி வருகின்றனர். மேலும் ஒரு சிலர் இது மொழிப்போரை கொள்கை மோதலை ஏற்படுத்தும் என்றும் விவாதத்தை எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, இன்று தமிழில் பதவி பிரமாணம் செய்து கொண்ட அத்தனை எம்.பிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், மேலும் பிற மொழிகளை எதிர்க்காமல் தமிழைக் காக்கவும், தமிழ் மொழியை ஆட்சி மொழியாக மாற்றும் தொடர்ந்து பயணிப்போம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.