கற்றது கை மண் அளவு எனும் அவ்வையார் பாடலை மேற்கோள்காட்டி பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி நம் நாட்டில் உள்ள பல்லுயிர் மனித இனத்திற்கு ஒரு மதிப்புமிக்க பொக்கிஷம் என்றும் அதனை நாம் பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். எதிர்கால திட்டத்திற்காக நாம் அதனை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் பல்லுயிர் எத்தனையோ இருந்தாலும் அதில் நாம் அறிந்தது கை மண் அளவுதான் என்றும் அவற்றில் அறியாதவற்றை ஆய்வு செய்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் “கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு” என்ற அவ்வையாரின் தனி பாடலை மேற்கோள் காட்டி மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார்.