தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கார்டு முறையில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. பின்னர் அது ஸ்மார்ட் கார்டு என்று மாற்றப்பட்டு அதன் அதன்படி பதிவு செய்யப்பட்டு பொதுமக்கள் தங்கள் பொருட்களை பெற்றுச் சென்றனர். தற்போது நவீன முறைக்கு மாற்றும் பொருட்டு அனைத்து நியாயவிலை கடைகளிலும் பயோமெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில்தான் அமைச்சர் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக ரேஷன் கடைகளில் பழைய முறையான ஸ்மார்ட் கார்டு முறையிலேயே பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். பயோமெட்ரிக் முறையில் கோளாறு ஏற்பட்டுள்ளது என்றும் பயோமெட்ரிக் முறை சரியாகும் வரை பழைய முறைப்படியே ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.