Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 8 ம் வகுப்பு வரை பள்ளிகள்…. அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கையின் போது எட்டாம் வகுப்பு வரை மாற்றுச் சான்று இல்லாமல் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் சேர்க்கலாம் இன்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே வகுப்புகள் தற்போது வரை நடைபெற்று வருகின்றது. கடந்த 14ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக பணிகளுக்காக பள்ளிகளுக்கு வரவேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது.  கடந்த 14ஆம் தேதி முதல் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. தனியார் பள்ளிகளை ஒப்பிடும்போது அரசு பள்ளியில் மாணவர்களின்  சேர்க்கை அதிகரித்து  இருப்பதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையின் போது எட்டாம் வகுப்பு வரை மாற்றுச் சான்று இல்லாமல் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் சேர்க்கலாம், மாணவர்கள் தங்கள் ஆதார் எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதும் என பள்ளிக் கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். பலர் அரசு பள்ளிக்கு மாறி வரும் நிலையில், கல்விக் கட்டணம் செலுத்தினால் மட்டுமே டிசி தரப்படும் என தனியார் நிர்வாகம் கூறுவதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories

Tech |