தமிழ்நாடு முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் 27 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு கடந்த சில நாட்களாக ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து வருகின்றது. அந்த வகையில் இன்று 27 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு எஸ்.பி.யாக விஜயகுமார், காஞ்சிபுரம் எஸ்.பி.யாக சுதாகர், திருப்பத்தூர் எஸ்.பி.யாக சிபி சக்ரவர்த்தி, ராணிபேட்டை எஸ்.பி.யாக ஓம் பிரகாஷ் மீனா, திருவண்ணாமலை எஸ்.பியாக பவன் குமார் ரெட்டி, விழுப்புரம் எஸ்.பி.யாக ஸ்ரீனதா, கடலூர் எஸ்.பியாக சக்தி கணேஷ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து திருவாரூர் எஸ்.பி.யாக ஸ்ரீனிவாசன், நாகை எஸ்.பியாக ஜவஹர், மயிலாடுதுறை எஸ்.பியாக சுகுனா சிங், நீலகிரி எஸ்.பியாக ஆஷிஷ் ராவத், ஈரோடு எஸ்.பியாக சசி மோகன், திருப்பூர் எஸ்.பியாக சஷாங்க் சாய் தருமபுரி எஸ்.பியாக கலைச்செல்வன், பெரம்பலூர் எஸ்.பியாக எஸ் மணி, கடலூர் எஸ்.பியாக சக்திகணேசன், திருச்சி எஸ்.பியாக டாக்டர் ப. மூர்த்தி, அரியலூர் எஸ்.பியாக ஃபெரோஸ் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்