மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு தமிழக சட்டப்பேரவை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. அப்போது மறைந்த சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ், விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் முன்னாள் எம்எல்ஏக்கள் 8பேரின் மறைவுக்கும் பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
பின்னர் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டு சனி, ஞாயிறு விடுமுறை நாட்களுக்குப் பின் மீண்டும் ஜூலை 1ஆம் தேதி பேரவை மீண்டும் கூடுகிறது என்று அறிவிக்கப்பட்டது. ஜூலை 1ம் தேதி பேரவையில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. ஜூலை 30 வரை நடக்கும் கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதும் விவாதம் நடக்கிறது.