தமிழகத்தின் பிரபல ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் பாஜகவில் இணைந்துள்ளது திமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் மேல்மட்டத் தலைவர்கள் தன்னை செயல்படவிடாமல் ஒடுக்கியதாக குற்றம் சாட்டியிருந்தார். அதோடு இல்லாமல் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வந்த குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகுவார் என்று சொல்லப்பட்டது. அதே நேரத்தில் டெல்லியில் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து பேச சென்ற குஷ்புவுக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக நேரம் ஒதுக்கப்படவில்லை.
இதனால் டெல்லியில் இருந்து திரும்பிய குஷ்புவை பாஜக நிர்வாகிகள் தொடர்பு கொண்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து குஷ்பு, குஷ்பு கணவர் பாஜகவில் இணைய டெல்லி சென்றனர். தற்போது அவர் பாஜகவில் இணைந்துள்ளார். பாஜக தேசிய செயலாளர் சி.டி ரவி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தார்.
அதேபோல தமிழகத்தில் பிரபல ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் விவாதங்கள் ஒவ்வொன்றும் அனல் பறந்தது. திமுகவிற்கு எதிராக இவர் நடத்தும் ஒவ்வொரு வித விவாதங்களும் தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பாஜகவில் இணைந்து ”தன்னை பாஜக உறுப்பினர் என்று அடையாளப்படுத்திக் கொள்வது திமுக உட்பட அரசியல் கட்சியினரை நடுங்க வைத்துள்ளது.