திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், பாஜகவினருக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் அவர்களுக்கு… குட்டையை குழப்பி மீன் பிடிக்கிற நினைக்கிறாங்க…. ஜாதி பிரச்சனை, மத பிரச்சினையை உண்டாக்கி… மக்களிடையே பிளவை ஏற்படுத்தி…. எப்பொழுதும் நோட்டோவோடு குறைவாக ஓட்டு எடுக்குறோமே…இந்த முறை அதைவிட கூட ஓட்டு எடுக்கணும். வேற ஏதும் யோசிக்காதீங்க. தொகுதியைப் புடிச்சிருவனோ, வின் பண்ணிடுவானோ ஒன்னும் நடக்காது.
நாற்பதுக்கு நாற்பது நாம் ஜெயிக்க போகிறோம். என்னை எப்பொழுதும் நோட்டோவை விட கம்மியா ஓட்டு வாங்கி வந்தவுடன்… இந்த தடவை நோட்டோவை விட கூட ஓட்டு வாங்குவது தான் அவுங்க இலக்கு. வேற ஒன்னும் இல்ல. அரசியல் என்றால் என்ன என தெரியாமல். தமிழகம் எப்படி இருக்கும்னு தெரியாம.. இவன் கர்நாடகாவில் இருந்து இங்கு வந்துட்டு.. இப்படி பேசிவனா.. ஒன்னும் தெரியவில்லை. வெத்துவேட்டு.. அரசியலில் கத்துக்குட்டி. நாம் எதையும் கண்டு கொள்வதே இல்லை. இனி பேசினால் சும்மா இருக்கப் போறது இல்லை.
ஏற்கனவே அழுகிய முட்டை கொடுக்கின்றார்கள் என பேசினார். நானும் பதில் சொல்லி இருக்கேன் பார்த்திருப்பீங்க என நினைக்கிறேன். கிட்டத்தட்ட 2 சதவீதத்திலிருந்து 0.5 சதவீதமாக முட்டை அங்கிருந்து வண்டியில் வரும். அப்படி வரும் போது வைக்கும் உடைந்தே சில இடங்களில் வரும்… இறக்கி வைத்து விட்டு போய்விடுவான்..
நம்ம அமைப்பாளர்களுக்கு என்ன உத்தரவு என்றால் ? எல்லாம் முட்டையும் தண்ணீரில் போடணும். மிதக்கின்ற முட்டையை தனியாக எடுத்து வைக்க வேண்டும். ஒப்பந்தத்தில் என்ன சொல்லி இருக்கின்றோம் என்றால் ? இதெல்லாம் உடைந்து போன மூட்டை, கேட்டு போன மூட்டை என்பதை மாற்றி விட வேண்டும். திங்கள் கிழமை ஒரு லாரி வரும்.
புதன் கிழமை ஒரு லாரி வரும் போது நீ பழைய முட்டையை வாங்கிட்டு, உடைஞ்ச முட்டையை மாற்றிக் கொடுக்கணும்… இதுதான் ஒப்பந்தம். அப்புறம் இவுங்க என்ன பண்ணுவாங்கண்ணா ? அழுகிய முட்டையை எடுத்து செடிக்குள் வைத்து புடைத்திரு என சொல்லும் போது… அந்த பொண்ணு சொல்லிச்சு… மேடம் இதெல்லாம் நாங்க திரும்பி வாங்கிப்போம். நாளைக்கு வந்து கொடுத்துருவாரு என சொன்னங்க என தெரிவித்தார்.