Categories
மாநில செய்திகள்

தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு… விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என அறிவிப்பு

முதல்வர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது.

இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், சம்பத், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, செல்லூர் ராஜு, சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், ஊரடங்கு குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

ஊரடங்கை 2 வாரங்களுக்கு நீட்டிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் கூறுகின்றன. ஊரடங்கு பற்றிய மத்திய அரசின் வழிகாட்டுதல் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிக்காத பகுதிகளில் தொழிற்சாலைகளை அனுமதிப்பது தொடர்பான சிறப்பு குழுவின் அறிக்கை மீது முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த கூட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது. மேலும், ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்புகள் வெளியாக உள்ளன.

Categories

Tech |