தமிழக அமைச்சரவை கூட்டம் என்பது வரக்கூடிய ஜனவரி நான்காம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற இருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறக்கூடிய இந்த அமைச்சரவை கூட்டத்தில் 35 அமைச்சர்கள் முதலமைச்சருடன் சேர்ந்து பங்கேற்க உள்ளார்கள். வரும் ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் தமிழக சட்டமன்றம் கூட இருக்கிறது.
அது பொங்கலுக்கு முன்பா ? பின்பா ? என அறிவிப்பு வர இருக்கிறது. அதில் என்ன அறிவிப்பு வெளியிடலாம்? தமிழக அரசின் செயல்பாடுகள், அறிவிப்புகள் என்ன இருக்க வேண்டும் ? என்பது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் புதிதாக கொண்டுவர வேண்டிய சட்ட மசோதாக்கள் ஏதாவது இருந்தால், அது அமைச்சருடைய ஒப்புதல் பெறப்படும் என்று தெரிகிறது.
அதுமட்டுமல்லாமல் 10 அமைச்சர்களுடைய துறைகள் மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றன. அதனுடைய பங்களிப்பு எந்த அளவுக்கு இருக்கும் ? செயல்பாடு எந்த அளவுக்கு இருக்க வேண்டும் ? என்பது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. எதற்காக அமைச்சரவையில் அடுத்தடுத்து மாற்றப்பட்டன ? புதிய அமைச்சர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் ?
இளைஞர் மேம்படுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கூடிய உதயநிதி பங்கேற்க கூடிய முதல் அமைச்சரவை கூட்டமாக இருக்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே நிலைமையில் உள்ள சட்ட மசோதாக்களை எவ்வாறு மீண்டும் கவர்னருடைய ஒப்புதலை பெற வேண்டும் ? எந்த மாதிரியான முயற்சிகள் எடுக்க வேண்டும் ? என்பன போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்தும், புதிய தொழில் திட்டங்கள் குறித்தும் இதில் விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது