ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருந்த பெரிய கருப்பனுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சராக இருந்தார். அவருக்கு கூடுதலாக காதி துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது.
வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரன் தற்போது சுற்றுலாத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் வனத்துறை அமைச்சர் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று கிட்டத்தட்ட 11 அமைச்சருடைய இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றன.