Categories
அரசியல் மாநில செய்திகள்

கோவிலை வைத்து தமிழகத்தை நடத்தலாம்; எக்ஸ்ட்ரா நிதி எதுவும் வேண்டாம் – அண்ணாமலை

தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் ஹிந்து அறநிலையத்துறை கோவில் நடத்துறீங்க. ஒரு கோவிலுக்குள் போய் கோவில் உடைய லட்சணத்தை பார்க்கணும். ஆறு கால பூஜை கிடையாது, அந்த கோவிலில் ஐயர் ஒரு திரி வாங்கினால் கூட பத்து கணக்கு எழுதி ஒரு திரி வாங்க வேண்டும்.

அந்த திரியில் எண்ணெய் உ யுற்ற வேண்டுமென்று ஊற்ற வேண்டும் என்றால் அதற்கு ஒரு ஆயிரம் கணக்கு எழுதி அந்த அறநிலையத்துறை அதிகாரிகளிடம் போய் அனுமதி வாங்க வேண்டும். இதுதான் தமிழகத்தில் அறநிலைத்துறை நடத்தக்கூடிய கோவிலினுடைய நிலைமை.  ஒரு திரி, ஒரு எண்ணெய் வாங்க முடியாது.

இந்த நேரத்தில் அமைச்சர் கிளம்பி எங்கே போகிறார் ? என்றால் சிதம்பரம் கோவிலுக்கு போகிறார். இங்கே எதற்கு வந்தீர்கள் ? என்றால் இந்த கோவிலில் ஆய்வு பார்க்க வந்தேன் என்று… நடத்துகின்ற கோவிலிலே ஒன்று காணோம், நன்றாக நடந்து கொண்டிருக்கிற கோவிலுக்கு நீங்கள் எதற்கு வருகிறீர்கள்? நீங்கள் கோவிலில் நன்றாக நடத்தி காட்டி விட்டு,  அறநிலைத்துறை கைக்கு வந்த பிறகு விஐபி தரிசனம் கிடையாது,

அனைத்து மனிதர்களும் சமம், யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை, தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கோவில்களிலும் கூட அனைவருக்கும் மதியான உணவு, எல்லா கோவிலும் ஒரு பள்ளிக்கூடத்திற்கு பணம் கொடுக்கிறது, ஒரு எல்லா கோவிலும் ஒரு காலேஜ் நடத்துகிறது. இந்த மாதிரி இந்த கோவிலை வைத்து தமிழகத்தை நடத்தலாம் , எக்ஸ்ட்ரா நிதி எதுவும் வேண்டாம். தமிழகத்தில் இருக்கக்கூடிய பெரிய பெரிய கோவில்களில் பக்தாதிகள் கொடுக்கக்கூடிய காணிக்கையில் மிகப்பெரிய அளவில் தமிழகத்தில் வளர்ச்சியை கொண்டு வரலாம். ஆனால் உங்களுக்கு கோவில் எதற்கு வேண்டும் ?

அறநிலைத்துறை அமைச்சர் போகின்ற  கார் வாங்குவதற்கு ஒரு கோவில் வேண்டும், அவர் பி.ஏக்கு  சம்பளம் கொடுப்பதற்கு கோவிலுடைய பக்தாதிகளின் காணிக்கை வேண்டும். அதற்காகத்தான் திமுக அரசுக்கு இந்து அறநிலை துறை தேவை.  நடராஜர் ஐயா கோவிலுக்கு சிதம்பரத்திற்கு போய் இந்த கோவிலிலும் நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று சொல்வது இதை விட கேவலம் எதுவும் இருக்க முடியாது என தெரிவித்தார்.

Categories

Tech |