ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி இருக்கிறார்.
ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க கோரி முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான 12 ஆயிரத்து 250 கோடி ரூபாயை விரைவில் விடுவிக்குமாறு அந்த கடிதத்தில் தமிழக முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு 41வது ஜிஎஸ்டி காணொளி மூலமாக நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பான அம்சங்களும் இந்த கடிதத்தில் இடம்பெற்றுள்ளன.
2015 16 ஆம் நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு 14 சதவீதம் வளர்ச்சி வீதத்தில் 5 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும். கொரோனா கால நெருக்கடியால் மாநில அரசு ஆத்ம நிர்பார் பாரத திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கான நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என பல்வேறு அம்சம்களை தமிழக முதல்வர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.